யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்து
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கையில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 25 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த சிவில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் மனித உரிமை நிலைமைகள் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகள் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamillook.com/display.aspx?id=9fde7d73-f7ee-4d6f-b8a5-db4897bebcc1
read more...