Thursday, 11 March 2010

இலங்கையில் சர்வதேச விமான நிலையம் அமைக்க சீனா உதவி...


 இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமானநிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு அரைவாசிக்கு மேற்பட்ட நிதியை சீனா வழங்கியிருப்பதாகவௌம் தெரிய வருகிறது. இதற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சீனா கடனாக இலங்கைக்கு கொடுத்திருக்கிறது.
அம்பாந்தோட்டையில் ஏலவே சீனாவின் பெருந்தொகைக் கடன் உதவியோடு ஒரு துறைமுகம் கட்டப்பட்டு வருவது அறிந்திருப்பீர்கள். மேலே குறிப்பிட்ட இரண்டு கட்டுமானப்பணிகளும் சீனாவின் கட்டுமான கம்பனிகளுக்ககே வழங்கப்பட்டிருக்கின்றன. அன்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களே பெருமளவு வேலைகளுக்கு அமர்த்தப்படுவதாகவும் அறியக்கிடைக்கிறது.
இதுதவிர 100 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை ரயில்வே திணைக்களத்துக்கு கடனுதவி செய்யவும் சீனா இணங்கியிருக்கிறது.
மேற்படி விடையங்கள் இலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீள் வைத்திருக்க விரும்பும் இந்திய அரசாங்கத்திற்கு பெரிய தலையிடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

http://www.tamillook.com/display.aspx?id=66f8215e-dfb7-4e8b-be85-21a7fd7f9fce

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இலங்கையில் சர்வதேச விமான நிலையம் அமைக்க சீனா உதவி..."

Post a Comment