பார்வையிடலாம்.
வவுனியா நெளுக்குளம் தொழில் நுட்பக் கல்லூரி தடுப்பு முகாமில் இருந்து இவர்கள் மேலதிக விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில், 100 பேர் பூஸா தடுப்பு முகாமிற்கு கடந்த 26ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக வருமாறு: கிளிநொச்சி35, யாழ்ப்பாணம்26, முல்லைத்தீவு13, வவுனியா15, மன்னார்07, மட்டக்களப்பு03, திருகோணமலை01.
இவ்வாறு பூஸா தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டவர்களின் விவரங்களை இன்று புதன் கிழமை முதல் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்.அலுவலகத்தில் பார்வையிடலாம் என்று இணைப்பதிகாரி த.கனக ராஜ் தெரிவித்தார்
இதேவேளை வவுனியா செட்டிகுளம் தடுப்பு முகாமில் இருந்து பூஸா முகாமிற்கு மாற்றப்பட்ட 104 பெண்களின் விவரங்களும் இங்கு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: on "100 இளைஞர்கள் பூஸாவுக்கு மாற்றம் !"
Post a Comment