Friday, 5 March 2010

புலம்பெயர் தமிழர் போராட்டங்களால் இலங்கை ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி!

புலம்பெயர் தமிழர் போராட்டங்களால்  இலங்கையின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியானது,  பாதிக்கப்பட்டுள்ளது என்று சிங்கள இணைய தளம் ஒன்று கூறியுள்ளது.
350  ஆடை தொழிற்சாலைகள் இலங்கையில் இயங்குகின்றன. மூன்று இலட்சம் தொழிலாளர்கள் இந்த ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றார்கள்.
2008 ஆம் ஆண்டு நான்காயிரம்  கோடி ரூபாவுக்கு ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டது. இருப்பினும் இவ் ஆண்டு இந்த அளவை எட்ட முடியாது என கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் பூட்சிய வரி சலுகையினை நிறுத்தியுள்ளமை, அமெரிக்காவில் புலம்பெயர் மக்கள் நடத்தும் இலங்கை ஆடை  கொள்வனவு செய்வதனை புறக்கணிக்கும்  போராட்டம், பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டங்களை என்பனவே இதன் பின்னடைவுக்கான காரணங்கள் ஆகும்.
இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ,அமெரிக்க சந்தைகளை இழந்து கொண்டிருக்கின்றது.  இதற்கான  இன்னொரு முக்கிய காரணம்  இலங்கை அரசாங்கம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது என்ற உலகளாவிய பிரச்சாரமும் குற்ற சாட்டும் ஆகும்.
இலங்கை ஆடைகளின் ஏற்றுமதியில் 50 விழுக்காடு ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகள் உள்வாங்குகின்றன. உடனடியாக  வேறு இடங்களில் இவ் 50விழுக்காடு  ஏற்றுமதிக்கான சந்தைகளை பெற்றுக்கொள்ள முடியாது. ஆசியாவில் அரசாங்கம் பெற முடியும் என நம்புவது, பிரச்சாரம் செய்வது போலியானது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamillook.com/display.aspx?id=e4319dcb-9e9e-41a1-a87a-77b003356277

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "புலம்பெயர் தமிழர் போராட்டங்களால் இலங்கை ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி!"

Post a Comment