Wednesday, 3 March 2010

அவுஸ்திரேலியாவில் இலங்கை-இந்திய தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது!




அவுஸ்திரேலியாவில் இந்திய-இலங்கைத் தம்பதி மீது  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அவர்களது வீடும் சூறையாடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் வைத்து இலங்கையர் ஒருவரும் அவரது இந்திய மனைவியும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
மெல்போர்னில் காரம்ஸ் டவுன் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் அகல்யா என்ற இந்தியப் பெண்ணையும் இலங்கையைச் சேர்ந்த அவரது கணவர் ரஞ்சித் சகஸ்ரநாமமும் இத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். குடிபோதையில் இருந்த 25இற்கும் மேற்பட்டவர்கள் இத் தம்பதியினர் மீது இனவாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட பின் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றுள்ளது. அக் கும்பல் அவர்களை ஆஸ்திரேலியாவை விட்டு உடனே வெளியேறுமாறு எச்சரித்தபடி இத் தாக்குதலை நடத்தியுள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் 19 ஆண்டுகளுக்கு முன்  குடியேறிவிட்ட இத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  உடனே நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கொல்வோம் என்று அக் கும்பல் மிரட்டியதாகவும சகஸ்ரநாமம் கூறியுள்ளார். பலமுறை தொலைபேசியில்  போலீசாரை தொடர்பு கொண்டும் கூட அவர்கள் உடனடியாக உதவிக்கு வரவில்லை என்று ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அவுஸ்திரேலியாவில் இலங்கை-இந்திய தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது!"

Post a Comment