இது தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் தம்மால் காத்திரமான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும். என்று பொதுஅமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்புக்காவலில் உள்ள பெருமளவான பெண்கள் அண்மையில் செட்டிக்குளம் முகாம் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வேறு வலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களை பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்களுக்கும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு கொண்டு செல்லப்படுபவர்கள் இரு தொகுதி உடைகளையே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. படையினர் அவர்களை பூசா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்போவதாகவும் மிரட்டி வருகின்றனர்.
0 comments: on "தடுப்புகாவலில் உள்ள தமிழ் பெண்களை சிறீலங்கா இராணுவம் கடுமையாக துன்புறுத்துகின்றது!"
Post a Comment